வரலாறு காணாத அளவு மக்களின் பங்களிப்புடன் நடந்து முடிந்த ஈத் தின விளையாட்டு போட்டிகள்!

Date:

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கஹட்டோவிட்டவில் ஈத் தின(22) விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கமத்தை மைதானம் விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியாக பதிவான இந்த நிகழ்வு ஊர் மக்களின் பேராதரவை பெற்றது.

பல சுவாரசியமான நிகழ்வுகளை உள்ளடக்கி இருந்த இந்த போட்டி நிகழ்ச்சிகளை Western Commonwealth அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

வரலாற்றில் அதிக அளவு எண்ணிக்கையான வீரர்கள் பங்கு கொண்ட மரதன் போட்டிகள் காலையில் நடைபெற்றது.

மரதன் போட்டிகளில் 96 வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர்.

இது தவிர பெண்களுக்கான போட்டிகள் SEDO வளாகத்தில் பெண் நடுவர்களைக் கொண்டே நடத்தப்பட்டு பெண்களுக்கு சுதந்திரமாக போட்டிகளில் கலந்துகொள்ள செய்யப்பட்டிருந்த ஏற்பாடு பெண்களின் பேராதரவை பெற்றது.

மேலும் இதற்கு முன்னைய காலங்களில் நடந்த ஈத் தின விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளுக்கான பெயர் பதிவுகள் பணம் செலுத்தி மேற்கொள்ளும் நடைமுறை இருந்தாலும் இந்த போட்டி நிகழ்ச்சிகளில் பெயர் பதிவுகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து மக்களின் உதவிகளாலும் நடைபெற்று முடிந்த இந்த நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்த மைதானத்தில் வழங்கப்பட்ட முதல் பரிசு மைதானத்தை கஹட்டோவிட முஹியத்தீன் பெரிய பள்ளிக்கு அர்ப்பணிப்பு செய்து ஊர் மக்களுக்கு தானம் செய்த அல் ஹாஜ் உஸ்மான் அவர்களின் கரங்களினாலும், மைதானத்தை செப்பனிடும் முயற்சியில் பாரிய பங்களிப்பு செய்த றுஷ்டி ஹாஜி அவர்களின் கரங்களினாலும் வழங்கி வைத்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வும் இடம்பெற்றது.

மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து இனிவரும் காலங்களிலும் ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு Western Commonwealth அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டி நிகழ்வில் வரலாறு காணாத அளவு மக்களின் பங்களிப்புடன் ஈத் தின விளையாட்டு போட்டிகள் இனிதே நடந்து முடிந்தன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...