விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் சந்தர்ப்பம்!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு, பரீட்சகர்களை இணைத்துக்கொள்ள பரீட்சை திணைக்களம் மீண்டும் விண்ணப்பம் கோரியுள்ளது.

நேற்று(27) முதல் எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரையான 6 நாட்களில் இதற்கான விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பௌதீகவியல் (01), இரசாயனவியல் (02), கணிதம் (07), விவசாய விஞ்ஞானம் (08), உயிரியல் (09), இணைந்த கணிதம் (10), தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் (29), வணிகக்கல்வி (32), பொறியியற் தொழில்நுட்பவியல் (65), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (66), தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (67) மற்றும் ஆங்கிலம் (73) ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டுக்கு முந்தைய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காத ஆசிரியர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள், தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றியிருப்பின், அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2022.12. 31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடிமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதிபெற்றவர்கள் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரியுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...