ஹர்த்தாலின் போது சேவையில் ஈடுபட்ட அரச பஸ் மீது கல்வீச்சு

Date:

வடக்கு, கிழக்கு தழுவிய பகுதிகளில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட டிப்பொவுக்கு சொந்தமான அரச பஸ் ஒன்று இன்று (25) அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பஸ் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பஸ்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...