ஏப்ரல் 15 நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 எனவீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.
சாதாரண நாட்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 90,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதாகவும் நாளாந்த வருமானம் ரூபா 25 மில்லியன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.