யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 5 பேர் வெட்டிக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர்.
அத்தோடு கொள்ளையிடப்பட்ட 40 பவுண் தங்கநகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
இந்த கொலைகளின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட வீட்டிலிருந்து திருடப்பட்ட 40 பவுண் தங்க நகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
இந்த கொலைகளின் மற்றொரு பிரதான சூத்திரதாரி ஜேர்மனியில் இருக்கலாமென நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.
பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம்இ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் இ 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளைஇ 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரிஇ 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.