அடுத்த இரு வாரங்களில் கோழி இறைச்சி, முட்டை விலை குறையும்!

Date:

அடுத்த இரண்டு வாரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தச் சலுகையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சங்கம் அண்மையில் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.

“நீண்ட கலந்துரையாடலை தொடர்ந்து, தேவையான சோள கையிருப்புகளை இறக்குமதி செய்வது மற்றும் கால்நடைகளுக்கு வருடாந்த நெல் அறுவடையில் அதிகப்படியான நெல்லை வழங்குவது குறித்து உடனடியாக முடிவெடுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த முடிவு உற்பத்தி செலவைக் குறைக்க உதவும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான கால்நடை உணவுகள் குறைந்த விலையில் கிடைத்தால், அந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கும்.

கால்நடை உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தால் அது ஒரு கிலோ கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விற்பனை விலையை குறைக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...