அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளால் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் உழைக்கும் போதே வரி அறவீடு போன்ற பல காரணிகளினால் இவ்வாறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிறேி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களில் நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் மந்த போசனை நிலவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவில் கடமையாற்றிய நான்கு மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடாத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் தமது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...