‘ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை’: கொழும்பு பேராயர்

Date:

அரசியல் வாதிகள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் முதலாளி என நினைப்பதாகத் தெரிகிறது என கொழும்பு, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை, நீதிக்காக போராடுவது முக்கியமானது எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும், மக்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றும், அதனால்தான் நீதிக்காகப் போராடுவது முக்கியம் என்றும் பேராயர் கூறினார்.

சிலர் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் இருக்கும் முறையை தொடரட்டும் என்று கூறினாலும் இளைஞர்கள் போராடி இலங்கையின் அரசியல் முறையை மாற்றினார்கள் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...