உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25இல் நடத்த முடியாது: ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது நிதி ஒதுக்கீடு அடிப்படையிலோ தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

உள்ளூராட்சித் தேர்தலை 25ஆம் திகதி நடத்துவது கடினமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...