கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது.
லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு இரண்டு வயதில் கொண்டு செல்லப்பட்டது.
சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்கு மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் “Free the Wild” அமைப்பு கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், உலகின் நான்கு முன்னணி யானை நிபுணர்களின் பங்கேற்புடன், லூசியின் உடல்நிலை மூன்று நாட்கள் சோதனை செய்யப்பட்டது.
மேலும் லூசியின் சுவாசக் கோளாறு காரணமாக எட்மன்டன் மிருகக்காட்சிசாலையில் லூசி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
வரவிருக்கும் மாதங்களில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும், மேலும் லூசியின் இருப்பிடத்தை எப்படி மாற்றுவது மற்றும் அவரது உடல்நிலையை மேம்படுத்த மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பது குறித்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.