கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட திருத்தந்தை போப் பிரான்சிஸ்!

Date:

திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தீவிரமான பணிகளைத் தொடங்கினார்.

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார்.

ரோம் நகரின் புறநகர் பகுதியான காசல் டெல் மார்மோசில் இளம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச் சாலை உள்ளது.

இந்த ஜெயிலில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் தண்ணீரில் கழுவினார்.

பின்னர் அவர் கைதிகளின் பாதங்களை முத்தமிட்டார். இதில் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தினரும், பெண்களும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...