சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதில் பங்களிக்குமாறு முஸ்லிம்களிடையே பிரதமர் வேண்டுகோள்!

Date:

சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய இப்தார் வைபவம் நேற்று (18) பிற்பகல்  அலரி மாளிகையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடந்த தசாப்தங்களில் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் தீவிரமாக பங்களித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் கடந்த பல தசாப்தங்களாக தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீவிரமாக பங்காற்றி வருகின்றனர், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வார்கள்.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்குமாறு இஸ்லாத்தை பின்பற்றுபவர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக் கொண்டார்.

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் ஆன்மிக பலம் வளர்வதுடன், நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் தேசிய நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களும்  நடைபெற்றன.

இதேவேளை சமய விரிவுரைகளை ஆற்றிய மதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கி வைத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான அலி சப்ரி, நசீர் அஹமட், விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸாமில், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஏ.எச்.எம். ஃபௌசி, எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஷாரப், யதாமினி குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...