சுவையூட்டும் பாலை அருந்திய 12 சிறுவர்கள் வைத்தியசாலையில்…!

Date:

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட பாலை அருந்திய 12 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியொன்றின் போது பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட சுவையூட்டும்  பால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போதும் பாலை  அருந்தி மயக்கம், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு ஒவ்வாமையினால் சிறுவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர்கள் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...