சூடானில் உள்ள அபாயகரமான உயிரியல் ஆய்வகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில், ராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை இராணுவ படையான ஆர்.எஸ்.எப் பிரிவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச அமைப்புகள் வாயிலாக இயங்கும், உயிரியல் ஆய்வகத்தை, போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து, சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, நிமா சயீத் அபிட் கூறுகையில், ஆய்வகத்தை, கைப்பற்றியுள்ள போராட்டக்குழுவினர் விஞ்ஞானிகளை வெளியேற்றியுள்ளனர்.
ஆய்வகத்துக்குள் வல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், உள்ளே உள்ள முக்கிய பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படாமல் உள்ளது.
ஆய்வகத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், இரத்த கையிருப்புகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதோடு, பெரியளவில் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.