டுபாயில் உள்ள இலங்கை பௌத்த சமூகம் அண்மையில் டுபாயின் அல் முஹைஸ்னாவில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 1,500 இப்தார் உணவுகளை வழங்கியது.
கர்ஹூட்டை தளமாகக் கொண்ட லங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தினால் ரமழான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு மதம் மற்றும் சமூகம் தலைமையிலான சங்கம் என்ற வகையில், இந்த விநியோகம் நன்றியுணர்வின் சைகையாகவும், ரமழானின் போது சமூகங்களுக்கிடையில் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தைச் சேர்ந்த மூவாகம்மன சாந்த தம்ம தேரர், “இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உதவுவது மட்டுமன்றி, புனிதமான ரமழான் மாதத்தில் கருணை கொடுக்கும் மனப்பான்மை மற்றும் ஆசீர்வாதங்களை மேம்படுத்த உதவுகின்றன என்றார்.
ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையம் என்பது ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இலங்கை பௌத்தர்களின் சமய மற்றும் கலாசாரத் தேவைகளுக்கு சேவை செய்வதற்காக சமூக அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் 2018 இல் நிறுவப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.