இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வேலைவாய்ப்பு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வருடத்திற்கான அதிகூடிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளது.
6500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக வாராந்தம் 200 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படுகின்றனர் என்றார்.
“தென்கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்காக 109 இலங்கையர்கள் நேற்று சென்றுள்ளதுடன், மேலும் 65 இலங்கையர்கள் நாளையும், மேலும் 28 இலங்கையர்கள் நாளை மறுநாள் புறப்படுவார்கள்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.