பஹன மீடியாவின் கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பும், இப்தார் நிகழ்வும்!

Date:

தூய இலங்கை என்ற தொலைநோக்குடன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இயங்கி வருகின்ற பஹன மீடியா நிறுவனம் தனது பணிகளை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஓர் அங்கமாக கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை நேற்றைய தினம் (07) நடத்தியது.

கொழும்பு முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வாழ் கல்விமான்கள், மாகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ். அப்துல் முஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இஸ்லாமோபோபியா எதிர்ப்பு தினம் தொடர்பில் சன்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும், டெய்லி மிரர் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான அமீன் இஸ்ஸதீன் உரை நிகழ்த்தினார்.

தூய இலங்கை என்ற இலக்கை நோக்கிய பஹன மீடியாவின் பணிகள் தொடர்பான காணொளிகள் எடுத்துக் காட்டப்பட்டதோடு, எதிர்காலத்தில் இதற்கென முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளும் அவற்றை முன்னெடுப்பதற்கு நாட்டு மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டியதன் அவசியமும் எடுத்துக் காட்டப்பட்டன.

பஹன மீடியாவின் நிவ்ஸ் நவ் ஊடகம், பஹன வெளியீட்டகம், பஹன அகடமி ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரமுகர்களின் முன்னிலையில் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்வின் பின் பலரும் இந்தப் பணிக்கான தமது ஆதரவினைத் தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...