இந்திய மத்திய அரசு பாடத்திட்டங்களில் முகலாயர் குறித்த வரலாறுகளை நீக்கியுள்ளது: இப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி பேச்சு!

Date:

இந்தியாவின் ஆளும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர் குறித்த வரலாறுகளை நீக்கியுள்ளதுடன் அபுல் கலாம் ஆசாத் குறித்த பாடத்தையும் நீக்கியுள்ளமைக்கு மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி வன்மையாக கண்டித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் ‘இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி ‘ என்ற தலைப்பில் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு  உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்திய அரசு மேற்கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாறுகள் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்டிருக்கின்ற பாதகமான செயற்பாடுகளையும் கண்டித்து பேசியுள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக முக்கிய அம்சமாக முகலாயர்களின் வரலாறு சம்பந்தமாக தற்போதைய இந்திய அரசு மேற்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து பேசியதோடு முகலாயர்களின் வரலாற்று பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் முகலாயர்  கட்டிய தாஜ்மஹால் அமைதியை, அன்பை தாங்கி நிற்கிறது. உலக அளவில் இந்தியாவின் பெருமையை பேசுகிறது.  டெல்லி செங்கோட்டை என்பது ஆசியாவின் மிகப்பெரிய கோட்டையாகும்.

இவை எல்லாம் முகலாயர்கள் நாட்டுக்கு கொடுத்த நன்கொடைகளாகும், இந்த வரலாறு முக்கியமானது இப்படிபட்ட முகலாயர்களின் பாட திட்டங்களை ஒன்றிய அரசு நீக்கியுள்ளமையை கண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...