புதிய பயங்கரவாத தடைச் சட்டம்: குறிப்பாக முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டும்: சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீத்

Date:

ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப்பதிலாக (Prevention of Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( Anti-terrorism Act) என்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக அதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதனை எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள் மற்றும் பல அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அது தமிழருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அப்போது நாட்டில் பயங்கரவாத யுத்தம் நடைபெற்றது.

அதன்பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வகை தொகையின்றி அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் பெரும்பான்மையோர் பேசவில்லை.

அதன்பின் நாட்டில் ஆட்சி மாற்றம் தொடர்பான போராட்டம் ஆட்சியை மாற்றிய பின்பும் அதாவது போராட்ட இலக்கை அடைந்த பின்பும் ஒவ்வொரு கட்சியினுடைய அல்லது அமைப்புகளினுடைய அரசியல் இலக்குகளை அடைவதற்காக வெவ்வேறு கோசங்களை எழுப்பிக்கொண்டு தொடர்ந்தபோது அது இன்னுமொரு கோணத்தில் திரும்பியது.

அப்போதுதான் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள். இந்நிலையில்தான் இன்றைய சட்டமூலத்திற்கெதிராக பரவலான எதிர்ப்புக் கிழம்பி இருக்கிறது.

தற்போது இனவாதம் ஓய்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் எழாது என்று கூறமுடியாது. அவ்வாறான சூழலில் சிறுபான்மை, குறிப்பாக முஸ்லிம்கள் மீண்டும் இலக்காகலாம்.

இந்தப்பின்னணியில் சிறுபான்மைகள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் இச்சட்டமூலம்பற்றி ஓரளவாவது தெளிவடைய வேண்டியது அவசியமாகும்.

இச்சட்டமூலம் பற்றி இன்று மேடைகளில் பேசப்படுவது சரியா? பிழையா? உண்மையா? பொய்யா? விம்பம் செயற்கையாக பெருப்பிக்கப்படுகிறதா? அல்லது அவர்கள் கூறுவதுதான் சரியான விம்பமா? என்பது தொடர்பாக நமக்கு ஓரளவாவது புரிதல் இருக்கவேண்டும்.

குறிப்பாக நம் அரசியல் வாதிகள், அதிலும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை ஆராயவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் ஆதரவாகவோ, எதிராகவோ கையுயர்த்தப் போகின்றவர்கள்.

பொதுவாக நமது நாட்டில் ஒர் சம்பிரதாயம் இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவென்றால் அனைத்து சட்டமூலங்களையும் ஆதரிப்பது. எதிரணியில் இருந்தால் அனைத்தையும் எதிர்ப்பது.

17 யும் ஆதரிப்போம், 18யும் ஆதரிப்போம், 19யும் ஆதரிப்போம், 20யும் ஆதரிப்போம், 21 யும் ஆதரிப்போம். 22 வந்தாலும் ஆதரிப்போம். அதாவது + யும் ஆதரிப்போம்.

அதன் – யும் ஆதரிப்போம். அது நாம் ஆளும் கட்சியில்இருக்கின்றோமா? எதிர்க்கட்சியில் இருக்கின்றோமா? என்பதைப் பொறுத்ததேயொழிய அச்சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை பொறுத்ததல்ல.

அதன் சாதக, பாதகங்களைப் பொறுத்ததல்ல என்பது எழுதப்படாத எமது கொள்கை விதியாகும். சட்டமூலத்தையே வாசிக்காமல் அதன் உள்ளடக்கம் எப்படித்தெரியும்?

எனவே, தயவசெய்து குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை வாசியுங்கள். பொதுவாக, ஒரு முக்கியமான சட்டமூலம் வரும்போது அதனை வாசித்துப் புரியமுடியாவிட்டால் அத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களுடனாவது அது தொடர்பாக கலந்தாலோசியுங்கள். அதன்பின் கையுயர்த்துங்கள்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...