இன்று (ஏப்ரல் 26) எம்.எச். முஹம்மத் அவர்களின் ஏழாவது சிரார்த்த தினமாகும்.
பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக சபாநாயகராக இருந்து நாட்டுக்கு பல சேவைகளை செய்தார். பொரலை தொகுதியில் 11 வீத முஸ்லிம்கள் மாத்திரம் இருந்தும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல் ஹிஜ்ரத் தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரா கிராமங்கள் மற்றும் ஹிஜ்ரா பாடசாலைகளை உருவாக்கினார். ‘ராபிதா’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக இருந்து இலங்கையில் இஸ்லாமிய சர்வதேச நிலையத்தை உருவாக்கினார்.
குறிப்பாக 65 ஆம் ஆண்டு காணிகளை இழந்த முஸ்லிம்களுக்கு 400க்கும் குடும்பங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைச்சரவை அமைச்சரும் இல்லாத போது மர்ஹூம் ஏ.சீ.எஸ்.ஹமீத் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்தார்.
1962 இல் இலங்கையில் இஸ்லாமிய நிலையத்தை ஸ்தாபித்தார். இன்று முஸ்லிம்களின் முக்கியமான மையமாக மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம் அவரது மகனும் சவூதி அரேபியாவின் தூதருமான உசைன் தலைமையில் இயங்கி வருகிறது.
உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நிலையம் ஒன்றான ராபிதுல் ஆலமுல் இஸ்லாமில் ஸ்தாப அங்கத்தவர் ஒருவராக செய்யப்பட்டார். மன்னர் பைசல் ஆசிர்வாதத்துடனே ராபிதுல் ஆலமுல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்துடன் இணைந்ததன் மூலம் முஹம்மதுக்கு முஸ்லிம் தலைவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.இலங்கைக்கு பல முஸ்லிம் தலைவர்கள் இவரின் அழைப்பின் பேரில் வருகை தந்தனர்.
இலங்கை அரசியல் வானில் பல சாதனைகளை நிகழ்த்திய முஹம்மத் 2016ம் ஆண்டு ஏப்ரல் 25 ம்திகதி இறைவனடி சேர்ந்தார்.
95 வருடங்கள் உயிர்வாழ்ந்த மர்{ஹம் முஹம்மத்தின் பணிகள் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும்.