கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஜாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையுடன் இணைந்து சகல சமய மக்களையும் ஒன்றினைத்து இப்தார் நிகழ்வு ஒன்றினை கடந்த 10ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தன.
மஸ்ஜிதுகள் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட். ஏ. எம். பைஸல் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தசாசன மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரண கத்தோலிக்க சமய விவகார திணைக்கள பணிப்பாளர் திருமதி சத்துரி பிந்து கலந்துகொண்டனர்.
அத்தோடு உதவிப்பணிப்பாளர்கள் இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி, ஹஜ் குழுத் தலைவர் இப்ராஹிம் அன்சார், வக்பு சபைத் தலைவர் முஹைடீன் குஸைன், கொள்ளுப்பிட்டி பிரதேச மஸ்ஜிதுகள் சம்மேளத் தலைவர் றிஸான் குஸைன் மற்றும் திணைக்கள அதிகாரிகள், சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.