லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு சன்மானம்!

Date:

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குற்றச்செயலுடன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...