ஆசியாவின் 20 ஏழை நாடுகளுக்குள் இலங்கையும் இடம்பிடித்தது!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக யாஹூ நிதி இணையத்தளம் காட்டியுள்ளது.

இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளது. 2021ல் இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5555 அமெரிக்க டொலர்களாக இருப்பதை இது காட்டுகிறது.

இந்த தரவரிசையில் முதல் இடத்தை வட கொரியா பெற்றுள்ளதுடன்  2021 இல் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி  931 டொலர்களாகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் பெற்றுள்ளன. அந்த நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 1149 மற்றும் 1561 அமெரிக்க டொலர்களாகும்.

 

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...