2023 இல் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 500,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
மே மாதத்தில் இதுவரை 57,142 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மே மாதத்தில் இதுவரை மொத்தம் 15,052 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இதேவேளை மே முதல் மூன்று வாரங்களில் ஜேர்மனியில் இருந்து 5,318 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 5,273 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,812 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,039 பேரும், சீனாவில் இருந்து 2,935 பேரும், கனடாவில் இருந்து 2,516 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,263 பேரும், பிரான்சிலிருந்து 1,693 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.