இன்று 988 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (5) மற்றும் நாளை (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...