இலங்கையர்களாகிய நாம் பலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை ஆதரித்து வருகிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம்: நக்பா தினத்தில் சஜித் உரை

Date:

இலங்கையர்களான நாம் எப்போதும் பலஸ்தீன மக்களின் பக்கம் நின்று பலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன்   பலஸ்தீனத்தை சட்டபூர்வமான தேசிய நாடாகவும் ஏற்றுக் கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நக்பா தினத்தின் 75ஆவது ஞாபகார்த்த நிகழ்வு நேற்று கதிர்காமர் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகால தீராத துன்பங்களாக, பலஸ்தீன அரசாங்கத்தையும் அதன் மக்களையும் ஒரு பாரிய மனிதாபிமானப் பேரழிவு முறையாக அழித்ததை நினைவுகூர்வதற்காக இன்று நாம் இங்கு கூடுகிறோம்.

இலங்கையர்களான நாம் எப்போதும் பலஸ்தீன மக்களின் பக்கம் நின்று பலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். பலஸ்தீனத்தை சட்டபூர்வமான தேசிய நாடாகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பயங்கரவாதம், வெறுப்பைப் பரப்புதல், குடும்பப் பிரிவினை போன்றவற்றால் ஏற்பட்ட 75 ஆண்டுகால துன்பங்களை இங்கு நினைவு கூர்கிறோம்.

ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் இந்த கொடூரமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்கு சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்த ஓயாத பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் துணிவோ வலிமையோ எங்களிடம் இல்லாததால் இதற்கு நாமும் பொறுப்பாக இருக்கின்றோம்.

மனித உரிமைகள், சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள், பேச்சு சுதந்திரம் போன்றவற்றின் அடிப்படையிலான உலக நிர்வாக அமைப்பை வடிவமைக்க இயலாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டும், இந்தத் தருணத்தில் கூட, இந்த இருண்ட பாதையில் குறிப்பிடத்தக்க வெளிச்சத்தைக் காண முடியவில்லை.

இதன் வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை ஆராய்ந்தால், இந்த தீராத மனிதப் பேரிடருக்கு நீண்டகால தீர்வை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலில் உள்ள உறுப்பு நாடுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

பல ஆண்டுகளாக எமக்கு 242338 இலக்க தீர்மானம் பற்றி கூறப்பட்டு வருகிறது. சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்காக பாலஸ்தீன மக்களின் உரிமையை இலக்கம் 3236 தீர்மானத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, ஒஸ்லோ உடன்படிக்கையின் முதல் மற்றும் இரண்டாவது முயற்சிகள் இந்த இரண்டு எதிரெதிர் குழுக்களையும் ஒருங்கிணைத்து தீர்வு காணும் முயற்சிகளாகும்.

இது தவிர, கிளின்டன் அளவுருக்கள், இரண்டு நாடுகளின் அங்கீகாரம் தொடர்பான தீர்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் 1397 இலக்க தீர்மானம், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இந்த இலக்குகளை அடைவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

நிலையான சமாதானத்தை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பேரழிவுகரமான தோல்வியையே நிரூபித்தன.

அமைதிக்கான அறிவிப்புகள், வெளியீடுகள், உரைகள், பிரகடனங்கள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மத்திய கிழக்கில் இதுவரை அமைதி இல்லை. பாலஸ்தீனர்களுக்கும் சமாதானம் வரவில்லை.

அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை, பலஸ்தீனர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு நொடியும் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன.

சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இந்த மாபெரும் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரின் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக, நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான, சமரசங்களாக வரும் கடினமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் மூலம் வெறும் பார்வையாளர்களாகி விட்டோம்.

இங்கு 75 வருடங்களாக மனித உயிர்கள் பலியாகியது மட்டுமன்றி இந்த தொடர்ச்சியான மோதல்களினால் ஏற்படும் சமூக விளைவுகளும் ஆராயப்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கானோர் வேலைகள் இழந்துள்ளனர். பலஸ்தீனியர்கள் அவர்களின் அடிப்படை மனித தேவைகளை இழந்துள்ளனர்.

இரண்டு முக்கிய ஐ.நா சாசனங்களான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனம் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சாசனம் பற்றி நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.

இந்த 75 ஆண்டு காலம் முழுவதும், தீர்க்கமான, முடிவுகளை எடுக்காமல் உலகம் நின்று கொண்டிருந்த போது, பலஸ்தீனியர்களின் அரசியல் உரிமைகள், சமூக உரிமைகள், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், மத உரிமைகள் என வரும் உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

பலஸ்தீன மக்கள் மிகுந்த வறுமையையும், ஆதரவற்ற நிலையையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த மோதலால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். மனித பேரழிவு கணக்கிட முடியாதது.

இந்த அவல நிலையை முடிவுக்கு கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்? ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் சர்வதேச அறிவிப்புகள் மூலம் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வு நிரந்தரத் தீர்வுக்கான அடிப்படையாகும் என்பது எங்களின் உண்மையான நம்பிக்கை.

அனைத்து பலஸ்தீனியர்களின் உரிமைகள், கண்ணியம்,கௌரவம் மற்றும் சுயமரியாதையை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் இரு நாட்டுத் தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

இலங்கையர்களாகிய நாம் எப்போதும் பலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை ஆதரித்து வருகிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம்.

எதிர்காலத்தில் பலஸ்தீன மக்கள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பாதுகாக்கும் நடைமுறை சக்தியாக மாற்றுவோம்.

நாங்கள் இங்கு வெறும் அறிக்கையாக மாத்திரம் இதனை வரையறுக்க மாட்டோன் என்பதையும் உறுதியளிக்கிறோம்.

பலஸ்தீன மக்களுக்கான ஜனநாயகம், சமாதானம், சுபீட்சம் மற்றும் நிர்வாக உரிமைகளை நனவாக்கும் வகையில் இலங்கைத் தாயின் பிள்ளைகள் என்ற வகையில் இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இராஜாங்கள அமைச்சர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...