இலங்கையில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

Date:

இலங்கையில் மே முதல் வாரத்தில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…..

கடந்த மாதத்தின் இறுதி வாரத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா போன்ற அதிக நோயாளர்கள் பதிவாகும் மாவட்டங்களுக்கு நிதியளித்து விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...