அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தத்துடன் இந்த திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அடுத்த மாதம் முதல் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு 14 லீட்டர் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.