ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த சவூதி அரேபிய அறுவை சிகிச்சை நிபுணர் குழு

Date:

சவூதி அரேபியாவின்  விசேட அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்துள்ளது.
36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு, பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்டு இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக  நடத்தப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு உதவியுள்ளன, இதன் விளைவாக ஹசானாவும் ஹசினாவும் பிரிக்கப்பட்ட 56 வது இரட்டையர்களாவர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...