அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
(1/2) The signing of the agreement to extend the US$ 1000 million assistance scheme for the import of essential materials for a further period of one year was done today. The officials of the State Bank of India participated the event virtually. pic.twitter.com/BE7KNa6jvP
— Shehan Semasinghe (@ShehanSema) May 30, 2023
எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த இலங்கைக்கு அனுமதி வழங்குவதே இன்றைய உடன்படிக்கை என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.