ஓமான் முதலீட்டாளர் தாக்குதலின் பின்னணியில் உள்ள அமைச்சரை பதவி விலக்க வேண்டும்:எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை

Date:

அண்மையில் கட்டானையில் வைத்து ‘Al Obain Garment Factory’ ஓமான் நாட்டு அரபியை தாக்கிய சம்பவத்திற்குப் பின்னால் மொட்டுக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்தவே உள்ளதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரை பதவியிலிருந்து அகற்றுமாறு நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓமான் நாட்டு அராபிய முதலிட்டாளர்களின் தொழிற்சாலையில் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 500 குடும்பங்கள் தொழில் செய்து அந்த வருமானத்தில் வாழ்ந்து வருகின்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சுதர்சனி பெர்னான்டோ பிள்ளே தெரிவித்தார்.

இந்த அரசியல்வாதியின் இச் செயலினால் அந்த தொழிற்சாலையை ஓமான் முதலிட்டாளர் மூடிவிட திட்டமிட்டுள்ளனர். இதனால் 500 குடும்பங்கள் வருமானமின்றி பட்டனியில் உள்ளனர்.

இவ்வாறு எமது நாட்டுக்கு முதலிடும் முதலீட்டாளர்களை அரசியல்வாதிகள் தமது சொந்த நலன் கருதி ஆட்கள் வைத்து முதலீட்டாளர்களைத் தாக்குவதனால் எமது நாட்டுக்கு எவரும் முதலிட முன்வர மாட்டார்கள். இதனாலேயே எமது நாடு பொருளாதாரத்தின் பின்நோக்கிச் சென்றுள்ளது.

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் துாதுவர் இவ்விடயமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலசைச் சந்தித்து முறையிட்டுள்ளமையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...