கடுமையான வெப்ப காலநிலை: எச்சரிக்கையாக இருங்கள்!

Date:

2023, மே 28 (இன்று) முதல் நடைமுறைக்கு வரும் வெப்பச் சுட்டெண் அறிவித்தலை, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலின் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் – மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...