கண்டியில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

Date:

அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று கண்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேவஹுவ நிஜாமுதீன் தலைமையில் இடம்பெறும்.

கட்டுரை, கவிதை,சிறுகதை, சமூக வலைதளங்கள் முதலானவற்றை பயன்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இந்த கருத்தரங்கில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களும் பங்கு பற்றமுடியும்.

இதில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் பெறுமதி மிக்க சான்றிதழும் வழங்கப்படும்.

பங்குபற்ற விரும்புவோர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ் 0777798898 என்ற இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...