களுத்துறை மாணவி மரணம்: பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் !

Date:

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்று (09) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தித் தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இன்று (9) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காலி – ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய சந்தேக நபர் களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இசுறு உயன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டை வாடகைக்குவிட்டு, அவர் பாணந்துறையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.

இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் திருமணம் செய்துள்ளதுடன், முதல் திருமணம் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவர் களுத்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் பல பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது பண மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் இறுதிக் கிரியை இன்று (9) களுத்துறை – அடவில பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...