கோதுமை மாவின் விலை குறித்த அறிவிப்பு!

Date:

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவுக்கான சுங்க வரி 3% அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விலை உயர்வு சூத்திரம் குறித்து அமைச்சர் அளித்த பதில் வருமாறு

“இது குறித்து மிகவும் தவறான செய்தி இருப்பதாக மாவு உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. நான் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்தேன். மாவின் விலை ஐந்து ரூபா கூட அதிகரிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் அறிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மாவு கையிருப்பு உள்ளது “இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யப்படும் மாவு விலையே அதிகரித்துள்ளது.” என்றார்

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...