சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம்

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனால் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமுகமளித்தோ அல்லது மின்நகலினூடாகவோ அதனை செய்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மண்டபங்களுக்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அதனூடாக சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, எவ்வித காரணங்களுக்காகவும் சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் வழங்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...