நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்திய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஜெரோம் பெர்னாண்டோவின் அறிக்கை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது இது நாட்டில் பரபரப்பான தலைப்பாக மாறியது.பிற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.