ஜோ பைடனை கட்டியணைத்துக் கொண்ட மோடி!

Date:

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டனர்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்த உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததன் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஹிரோஷிமாவுக்கு வருகை தந்திருந்தார். மாநாடு நடைபெறும் அரங்கத்துக்கு வந்த ஜோ பைடனை வரவேற்கும் விதமாக அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரின் கையைப் பிடித்து பேசிவிட்டு பின்னர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் பைடன் சென்றார்.

அரங்கத்தில் பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில், ஜோ பைடன், நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...