முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளார்.
அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பயணத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 03:15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிச் சென்றதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.