ட்விட்டரின் CEO பதவியில் இருந்து விலகும் எலான் மாஸ்க்!

Date:

விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என, அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு வாரங்களில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என எலான் மாஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் கூறியுள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயற்படவுள்ளதாகவும் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மாஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லாவின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை மாஸ்க் வெளிப்படுத்தவில்லை.

எலான் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கடந்த ஆண்டு கையப்படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

குறிப்பாக அப்போதைய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களை பணியில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனிடையே, டுவிட்டர் நிறுவனத்திற்கு பெண் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தால் அது வழக்கமான தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து ஒரு பெரிய விலகலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...