நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களுக்கு வலை வீச்சு!

Date:

நடாஷா எதிரிசூரிய பெளத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் மேற்கொண்ட நகைச்சுவைக்கு சிரித்தவர்களை அடையாளம் காண பொலிஸ் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை நடாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷாஎதிரிசூரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கனிணி விசாரனைப்பிரிவு அதிகாரிகளால் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...