நாட்டில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை !

Date:

எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சபை முன்னெடுச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிறுபோகம், இடம்பெறும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும், பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில், எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கிறது.

எனவே, குறித்த காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக் காய்ச்சல் பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என வைத்தியர் குஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...