அனைத்து பொது அரசியல் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வேட்பாளராக போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் உள்ளன, ஆனால் இந்த கட்சிகள் எதுவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சிறந்த வேட்பாளர் தாம் என்றும், அவர் தனது வேட்புமனுவை அறிவிக்கும் போது, பல அரசியல் கட்சிகள் தமக்கு ஆதரவளிக்க முன்வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நாட்டில் பொருத்தமான பொது வேட்பாளர் யாரும் இல்லை. அனைத்தும் தோல்வியடைந்தன. எனவே இந்த நாட்டின் பிரஜைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் பொருத்தமான வேட்பாளராக நான் இருப்பேன்” .
அவர் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிடுவார் என வினவியபோது, இது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை அறிவிக்கும்போது, பல அரசியல் கட்சிகள் தம்மை அணுகி ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்..