பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு சென்றுள்ளதை தொடர்ந்து பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.
3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.