பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி கைது!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.

இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது காரை சுற்றி வளைத்த இராணுவத்தினர் , அவரை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இராணுவத்தை விமர்சித்து பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பி.டி.ஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குறற்ம்சாட்டி உள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...