பாணந்துறை வலான பிரதேசத்தில் இன்று (7) காலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக சென்று, மீண்டும் மத்துகம நோக்கி பயணித்து கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் பயணித்த லொறி முப்பது அடி உயர மின்கம்பத்தையும் இரண்டு இரும்பு வேலிகளையும் மோதியதன் பின்னர் கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தின்போது குறித்த பாரவூர்தியில் 17 பேர் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.