மே 9 வன்முறை சம்பவம்: அமைச்சர்கள் உட்பட 39 பேர் தாக்கல் செய்த மனு கைவிடப்பட்டது!

Date:

கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர்கள் உள்ளிட்ட 39 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) மீளப் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை மீளப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

எனினும், அந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் மரிக்கார் ஆகியோரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை மீளப்பெற அனுமதி அளித்தது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர மற்றும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 39 பேர் இது தொடர்பான மனுவை முன்வைத்திருந்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...