விண்வெளிக்குச் சென்ற சவூதி வீராங்கனைகள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்

Date:

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆய்வுப் பணிக்குப் பிறகு, சவூதி விண்வெளி வீரர்களுடன் மே மாதம் 22ஆம் திகதி அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்ட தனியார் விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ்சின் மெக்சிகோ வளைகுடாவில் இன்று (31) காலை பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன் வழிகாட்டலில் சவூதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி, விமானப்படை பைலட் அலி அல்கர்னி மற்றும், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் என 4 பேர் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ் பால்கென்-9 விண்கலத்தில் பயணம் செய்த இவர்களில் தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் தனது சொந்தப் பணத்தில் இணைந்து கொண்டார்.

ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட இவர்கள் ஒரு வார காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர்.

சவூதி சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சென்ற இந்த இரு பெண் வீராங்கனைகளும் அரபுலகில் முதல் முறையாக விண்வெளிக்குச் சென்ற பெண்களாக வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.

சவூதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

The இதற்காக விண்வெளி வீரர்கள் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே சவூதி அரேபியா இந்த வீராங்கனையை தனியார் ராக்கெக்ட்டில் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...