அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி; பலர் காயம்!

Date:

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் எனத் தகவல்டைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் பிரீமி யம் அவுட்லெட்ஸ் ஷாப்பிங் மாலில் மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாத நிலையில், இதுகுறித்து  பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் இனவெறி அமெரிக்காவில் மிகவும் பொதுவாக காணப்படும் அம்சமாகும்.

அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும்.

இதனால்  துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற முக்கிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர்.

அமெரிக்கா மனித உரிமைகள் பற்றிய பாடங்களை உலகிற்கு கற்றுக் கொடுக்கும் நிலையில், அதை தனது சொந்த நாட்டில் பின்பற்ற முடியாமல் இருக்கிறது.

இந்நிலையில், டல்லாஸ் நகரின் வடக்கே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 8 பேரைக் கொன்றதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

டெக்சாஸின் ஆலனில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கிய நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதாக நகர காவல்துறைத் தலைவர் பிரையன் ஹார்வி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சம்பவத்தை  நேரில் பார்த்த ஒருவர் உள்ளூர் ABC துணை நிறுவனமான WFAA TVயிடம், துப்பாக்கி ஏந்திய நபர் “நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்… வெளியே எடுத்த தனது துப்பாக்கியை கொண்டு வேகமாக சுட்டுக் கொண்டிருந்தார்”

என்றும் “அவர் தனது துப்பாக்கியை எல்லா திசைகளையும் நோக்கி சுட்டுக் கொண்டிருந்தார்” என்றும் கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...