அலி சப்ரி ரஹீமுக்கு பின்னர் இனி வி.ஐ பி.க்களின் பயணப்பொதிகளும் சோதனை செய்யப்படும்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் ஓய்வறையின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகள் சுங்கத்தினால் இனிவரும் காலங்களில் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கடத்தப்பட்டதன் நேரடி விளைவாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

முக்கிய பிரமுகர்களின் வழியாக செல்பவர்கள் அல்லது வருபவர்கள் தொடர்பில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும்.

எவ்வாறாயினும், அதன்பிறகு, தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கான ஸ்கேனிங் இயந்திரம் மூலம் சுங்கப்பிரிவினர், அவர்களின் பொதிகளை பரிசோதனை செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் சப்ரியிடம் இருந்து 3.4 கிலோ மதிப்புள்ள தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து சுங்கத்துறை அவருக்கு 7.4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது.

இதன்போது அவருடன் வந்த “உதவியாளர்” என்று கூறப்பட்டவரிடமிருந்து 19 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை அலி சப்ரி இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆறு தடவைகள் டுபாய்ககு பயணம் செய்துள்ளதாக சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஒரு பணக்கார கடத்தல் குழுவின் பொருட்களை எடுத்து வருபவராக செயல்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை சந்தேகிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...